இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிம்லா ஒப்பந்த்ம்தான் இருநாடுகளிடையேயான போர் பதற்றத்தைத் தணிக்கும் உடன்படிக்கையாக கருதப்படுகிறது. தற்போது சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தான்தோன்றித்தனமாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதன் மூலம், இந்தியாவுடனான போருக்கு அந்த நாடு தயாராகிவிட்டது என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.
