உலகம்
உலகம் News in Tamil, உலகம் Latest News, உலகம் News Get உலகம் News in Tamil, Find உலகம் Latest News on News18 tamil
- முடிவுக்கு வருமா உக்ரைன் – ரஷ்யா போர்..? அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!by News18 Tamil on April 19, 2025 at 11:58 am
ஏற்கனவே, சவுதி அரேபியாவில், மார்கோ ரூபியோ மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர், ரஷ்ய அதிபர் புதினுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
- பயங்கரவாதிகளிடம் அமெரிக்க ஆயுதங்கள்?.. தலிபான் அமைப்பு விற்றதாக தகவல்!by News18 Tamil on April 19, 2025 at 6:58 am
ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவுக்குச் சொந்தமான 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள் எஞ்சியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
- பதைபதைக்க வைத்த துப்பாக்கிச் சூடு.. கூலாக வீடியோ எடுத்த நபர்by News18 Tamil on April 18, 2025 at 1:27 pm
புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியான சம்பவத்தில், ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்க ஒரு நபர் அதனை கூலாக ஸ்டார்பக்ஸ் காபி குடித்தப்படி வீடியோவாக பதிவு செய்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
- மொத்த நாட்டில் ஒரே ஒரு கோடீஸ்வரர்.. சொத்து மதிப்பு இவ்வளவா?by News18 Tamil on April 18, 2025 at 12:25 pm
Tanzania richest man | தான்சானியாவின் ஒரே கோடீஸ்வரரான முகமது தேவ்ஜி, 2018-ல் கடத்தப்பட்டு 10 நாட்களில் விடுவிக்கப்பட்டார்.
- மண்டை ஓட்டுடன் முதுகுத்தண்டை ஒட்டவைத்து மருத்துவர்கள் சாதனை.!by News18 Tamil on April 18, 2025 at 11:36 am
16 வயதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு 10 வருடங்களுக்கு பிறகு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காஸாவில் மேலும் 92 போ் உயிரிழப்புby Din on April 19, 2025 at 8:05 pm
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது: கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த 48 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மட்டும் 92 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா். இத்துடன், காஸாவில் இஸ்ரேல் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் 51,065 போ் உயிரிழந்துள்ளனா்; 1,16,505 போ் காயமடைந்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலிby DIN on April 19, 2025 at 4:06 pm
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்டவா்களை அங்கிருந்து பிணைக் கைதிகளைக் கடத்திச் சென்றனா். அதையடுத்து அந்த அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் அந்த நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இடையே அமெரிக்கா, எகிப்து, கத்தாா் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்! – காங்கிரஸ் தலைவர் கார்கேஎனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததால் காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது.இந்த நிலையில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அவர்களில் பெண்கள், குழந்தைகள் என 15 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஊழியர் தெரிவித்தார்.
- உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!by DIN on April 19, 2025 at 2:37 pm
மாஸ்கோ: ஈஸ்டர் நாளில் உக்ரைனில் சண்டை நடைபெறாது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரஷிய அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இன்று(ஏப். 19) மாலை 6 மணிமுதல்(ரஷிய நேரப்படி) ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை ‘ஈஸ்டர் ட்ரூஸ்’, அதாவது ரஷிய தரப்பிலிருந்து தற்காலிக போர் நிறுத்தம் நிலவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்த காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது.
- கனடாவுக்கு உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவி சுட்டுக் கொலை!by DIN on April 19, 2025 at 11:10 am
கனடாவின் ஹாமில்டனில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் ஆன்டாரியோ அருகேயுள்ள ஹாமில்டனில் அமைந்துள்ள மோஹாக் கல்லூரியில் நம் நாட்டைச் சேர்ந்த ஹர்சிம்ரத் ரந்தாவா என்ற 21 வயது இளம்பெண் உயர் கல்வி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த புதன்கிழமை இரவு ஹாமில்டன் பகுதியிலுள்ளதொரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அங்கே நின்றிருந்ததொரு கறுப்பு காரில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அப்பகுதியில் நின்றிருந்ததொரு வெள்ளை காரில் இருந்தவர்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த சண்டையில், அங்கே நின்று கொண்டிருந்த அந்த இளம்பெண் மீது எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குண்டடி பட்டதில் அவர் கீழே மயங்கி விழுந்தார்.இதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த கொலையில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க, சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து வரும் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இளம்பெண் கொலை திட்டமிடப்பட்டதா அல்லது விபத்தா என்ற கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த மாணவி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கனடாவிலுள்ள இந்திய தூதரகம், மாணவி குடும்பத்தாருடன் தொடர்பிலிருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் இன்று(ஏப். 18) தெரிவித்துள்ளது.
- நெப்ராஸ்கா ஆற்றில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி!by DIN on April 19, 2025 at 7:30 am
நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியது பற்றி..