பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்த பிறகு முதல் முறையாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவில் மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.