தற்போதைய
- உச்சநீதிமன்றம் சொல்வதே இறுதியானது: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்by DIN on April 19, 2025 at 5:00 pm
எந்தவொரு விவகாரத்திலும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது என்று கடுமையான சொற்களால் உச்சநீதிமன்றத்தை விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே. பாஜக தலைவரது மேற்கண்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று(ஏப். 19) பேசியிருப்பதாவது: “உச்சநீதிமன்றத்தையோ அல்லது எந்தவொரு நீதிமன்றத்தையோ எதிர்த்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்புவது கவலைக்குரிய விஷயமாகும்.நமது சட்ட அமைப்பில், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அரசின் கையில் இல்லை; உச்சநீதிமன்றத்திடமே அந்த அதிகாரம் இருக்கிறது. இதையொருவர் புரிந்துகொள்ளாமல் பேசுவது வருத்தத்தை தருகிறது” என்றார்.இதையும் படிக்க: உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!
- மார்க்ரம், பதோனி அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!by DIN on April 19, 2025 at 4:26 pm
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 180 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார். ஜோஸ் பட்லர் அதிரடி: தில்லியை வீழ்த்தியது குஜராத்மேலும் ராஜஸ்தானின் இம்பேக்ட் வீரராக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கியுள்ளார். தொடர்ந்து, களமிறங்கிய லக்னௌ அணியில் மார்ஷ் (4), நிகோலஸ் பூரன் (11), பந்த் (3) என முன்னணி பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.சிறப்பாக விளையாடிய மார்க்ரம், பதோனி ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.மார்க்ரம் 66, 50 ரன்களில் வெளியேற இறுதியில் வந்த சந்தீப் ஷர்மா கடைசி ஓவரில் 27 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தானை பொறுத்தவரையில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், சந்தீப் ஷர்மா, தேஷ்பாண்டே, ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
- திருப்பதியில் கயாது லோஹர் சுவாமி தரிசனம்!by DIN on April 19, 2025 at 4:17 pm
நடிகை கயாது லோஹர் திருமலையிலுள்ள ஏழுமலையான் திருக்கோயிலிலியில் வழிபாடு நடத்தியுள்ளார்.பாரம்பரிய உடையணிந்து திருமலைக்கு வருகை தந்திருந்த கயாது லோஹருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அவரும் ஒருசில ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.விஐபி தரிசன டிக்கெட் மூலம் அவர் சுவாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து வழிவகை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ‘டிராகன்’ திரைப்படம் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை, அதிலும் குறிப்பக இளசுகளை கயாது லோஹர் தன்வசப்படுத்தியுள்ளார். தமிழில் அவரது எடுத்த படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
- காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலிby DIN on April 19, 2025 at 4:06 pm
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்டவா்களை அங்கிருந்து பிணைக் கைதிகளைக் கடத்திச் சென்றனா். அதையடுத்து அந்த அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் அந்த நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இடையே அமெரிக்கா, எகிப்து, கத்தாா் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்! – காங்கிரஸ் தலைவர் கார்கேஎனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததால் காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது.இந்த நிலையில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அவர்களில் பெண்கள், குழந்தைகள் என 15 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஊழியர் தெரிவித்தார்.
- அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்! – காங்கிரஸ் தலைவர் கார்கேby DIN on April 19, 2025 at 3:32 pm
அமலாக்கத் துறை நடவடிக்கைகளைக் கண்டு காங்கிரஸ் பயப்படாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப். 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஇந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தில்லியில் இன்று(ஏப். 19) நடைபெற்றது. அதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதற்கு எதிர்வினையாற்றினார்.கார்கே பேசியதாவது: “பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்கள் ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. யார் பெயரை அவர்கள் சேர்த்தாலும், நாங்கள் அஞ்சப் போவதில்லை” என்றார்.வழக்கின் பின்புலம்: காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் (ஏஜேஎல்) நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்ரமணியன் சுவாமி கடந்த 2014-ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.அதன் அடிப்படையில் கடந்த 2021-இல் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் சொத்துகளை கடந்த 2023, நவம்பரில் இணைத்தது.இந்த நிலையில், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.