தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட்டணி ஆட்சி மட்டும் அமைக்கவே மாட்டோம் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது. 2006-ம் ஆண்டு திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதும் காங்கிரஸ், பாமக ஆதரவுடன் 5 ஆண்டுகள் தனித்து ஆட்சி நடத்திய கருணாநிதியின் அந்த பார்முலாவையே கடைபிடிப்போம் என அறிவித்துள்ளது அதிமுக.