ஜம்மு காஷ்மீரின் பஹல்காமிம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.