பயங்கரவாத தாக்குதலால் உச்சகட்ட பதற்றம் நிலவும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி.
