இந்திய தேர்தல் ஆணையம் சமரசமான அமைப்பாகிவிட்டது; இந்திய தேர்தல் ஆணைய அமைப்பில் ஏதோ பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் பாஜகவோ, எப்போது வெளிநாடு சென்றாலும் இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி என்று பதிலடி தந்துள்ளது.
