திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் கழிவறையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கழிவறைக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்தது கண்டு மாணவிகள் கதறி கூச்சலிட்டதால் அப்பகுதி பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
