தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பல்வேறு மாநிலங்கள் வரவேற்று வருகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கடுமையாக கண்டனங்களுக்கு உள்ளான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
