டெல்லியின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (Jawaharlal Nehru University ஜேஎன்யூ JNU) மாணவர் சங்கத் தேர்தலில் முக்கிய பதவிகளை இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவராக இடதுசாரியான நிதிஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவியின் வைபவ் மீனா, இணைச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளார்.
