ஜம்மு காஷ்மீர் படுகொலைகளை முன்வைத்து மதவாத வலதுசாரிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் கொடும் செயலை வைத்து, சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
