ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கோர வெறியாட்டத்தில் 27 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நாளை அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா தலைமையில் நாளை டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
