ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 27 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை படுகொலை செய்த நிலையில் பாகிஸ்தான் வான் பரப்பை பிரதமர் மோடியின் விமானம் தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீர் தாக்குதலால் சவூதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி உடனடியாக நாடு திரும்பினார்.
