Jammu Kashmir Pahalgam Terror Attack (ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்): ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
