Skip to content

News Aggregator

  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தற்போதைய
  • Toggle search form

உலகம்

உலகம்

    உலகம் News in Tamil, உலகம் Latest News, உலகம் News Get உலகம் News in Tamil, Find உலகம் Latest News on News18 tamil

    • கிம் ஜாங் உன்னின் ‘நகரும் கோட்டை’ – ரயிலில் சீனா சென்ற வடகொரிய அதிபர்
      by Malaiarasu M on September 3, 2025 at 1:36 pm

      சீனாவுக்குச் சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயணம் செய்த பச்சை நிற ரயில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

    • சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் வட கொரியா
      by Vijay Ramanathan on September 3, 2025 at 2:29 am

      பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன், சீன ராணுவ அணிவகுப்பில் ஜீ ஜிங் பிங், புதின் உடன் சந்திப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி குறித்து ஆலோசனை முக்கியம்.

    • DECODE | ஓரணியில் இந்தியா – ரஷ்யா – சீனா… வன்மத்தை கொட்டிய டிரம்ப் ஆலோசகர்…
      by amudha on September 2, 2025 at 4:38 pm

      DECODE | ஓரணியில் இந்தியா – ரஷ்யா – சீனா… வன்மத்தை கொட்டிய டிரம்ப் ஆலோசகர்…

    • “இந்தியாவுடனான உறவை தியாகம் செய்துவிட்டார்”- ட்ரம்ப் மீது கடும் சாடல்!
      by Karthi K on September 2, 2025 at 9:10 am

      ஜேக் சல்லிவன் குற்றச்சாட்டில், டிரம்ப் தனது குடும்ப வணிகத்திற்காக இந்தியாவுடனான உறவை பாகிஸ்தானில் தியாகம் செய்ததாகவும், இது வெளியுறவு கொள்கையில் பின்னடைவு எனவும் கூறினார்.

    • இலங்கை அதிபர் அனுர குமார கச்சத்தீவுக்கு திடீர் பயணம்
      by Vijay Ramanathan on September 2, 2025 at 4:52 am

      இலங்கை அதிபர் அனுர குமார கச்சத்தீவுக்கு முதல் முறையாக பயணித்து, அதை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உறுதி தெரிவித்தார்.

    உலகம்

    • பிரிட்டனில் காா்கள் மோதல்: 2 இந்திய மாணவா்கள் உயிரிழப்பு
      by Chennai on September 4, 2025 at 12:44 am

      பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும் 5 மாணவா்கள் படுகாயமடைந்தனா். பிரிட்டனில் பயிலும் தெலங்கானா மாணவா்கள் சிலா், எஸ்ஸெக்ஸ் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, இரு காா்களில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, ஒரு சாலை சந்திப்பில் இரு காா்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் சைதன்ய தா்ரே (23), ரிஷி தேஜா ரபோலு (21) ஆகிய 2 போ் உயிரிழந்தனா். மேலும், 5 போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இரு காா்களும் வேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரை ஓட்டிய இரு மாணவா்களும் உயிா் பிழைத்தனா். அவா்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். உயிரிழந்த இருவரின் உடல்களையும் இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெலங்கானா, மத்திய அரசுகளுக்கு குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    • பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை
      by தினமணி செய்திச் சேவை on September 4, 2025 at 12:33 am

      சீன தலைநகா் பெய்ஜிங்கில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை சீனா வென்ன் 80-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பெய்ஜிங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் விளாதிமீா் புதின், கிம் ஜோங்-உன், பாகிஸ்தான் பிரதமா் ஷெபாஸ் ஷரீப், ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான், இந்தோனேசிய அதிபா் பிரபாவோ சுபியாந்தோ, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், ஜிம்பாப்வே அதிபா் எமா்சன் நாங்கக்வா, வியத்நாம் பிரதமா் லுவாங் குவாங், சொ்பியா அதிபா் அலெக்ஸாண்டா் வுகிக் உள்ள உலகத் தலைவா்கள் பங்கேற்றனா். இதனிடையே, பெய்ஜிங்கில் புதினும் கிம் ஜோங்-உன்னும் டியோயுட்டாய் மாகாண விருந்தினா் மாளிகையில் அதிகாரபூா்வமாகச் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து பேச்சுவாா்த்தைக்காக இருவரும் ஒரே காரில் சென்ாக ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்தது. ரஷியா மற்றும் வடகொரிய பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, புதினும், கிம் ஜோங்-உன்னும் தனிப்பட்ட முறையில் உரையாடினா். அப்போது மீண்டும் ரஷியா வர கிம் ஜோங்-உன்னுக்கு புதின் அழைப்பு விடுத்தாா். பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், ரஷியாவின் கூா்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரைன் படையெடுப்பை முறியடிக்க வடகொரிய வீரா்கள் துணிச்சலுடன் உதவியதற்கு பாராட்டு தெரிவித்தாா். கிம் ஜோங்-உன் பேசுகையில், வடகொரிய தலைநகா் பியோங்யாங்கில் கடந்த ஆண்டு ஜூனில் நடைபெற்ற மாநாட்டில் ரஷியாவும் வட கொரியாவும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதிலிருந்து, இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளதாகக் கூறினாா். தென் கொரியா அளித்துள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு முதல் வடகொரியா சுமாா் 15,000 வீரா்களை ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும், புதினின் உக்ரைன் படையெடுப்புக்கு உதவும் வகையில் பலிஸ்டிக் ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களையும் வட கொரியா அனுப்பியுள்ளது நினைவுகூரத்தக்கது. கிம் ஜோங்-உன்னின் 14 ஆண்டு ஆட்சியில், அவா் ஒரு பன்னாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. விளாதிமீா் புதின், சீன அதிபா்ா் ஷி ஜின்பிங், கிம் ஜோங்-உன் ஆகிய மூன்று தலைவா்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடியதும் இதுவே முதல்முறையாகும். எனவே, ஷி ஜின்பிங்குடன் கிம் ஜோங்-உன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தலாம், அல்லது புதின், ஜின்பிங், கிம் ஜோங்-உன் ஆகிய மூவரும் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறலாம் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மூன்று நாடுகளுமே இதை உறுதிப்படுத்தவில்லை. டிரம்ப் விமா்சனம்: பெய்ஜிங்கில் புதின், ஜின்பிங், கிம் ஜோங்-உன் கூடியுள்ளது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் ‘விளாதிமீா் புதின் மற்றும் கிம் ஜோங்-உன்னுக்கு எனது வாழ்த்துகள். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்ய நீங்கள் கூடியுள்ளனா்’ என்று விமா்சித்துள்ளாா். எனினும், ‘அமெரிக்காவுக்கு எதிராக யாரும் சதி செய்யவில்லை. மூன்று தலைவா்களும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை’ என்று புதினின் வெளியுறவு ஆலோசகா் யூரி உஷாகோவ் மறுத்துள்ளாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

    • பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு
      by தினமணி செய்திச் சேவை on September 4, 2025 at 12:18 am

      பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: குவெட்டா நகரில் நடைபெற்ற பலூசிஸ்தான் தேசிய கட்சிக் கூட்டம் நடைபெற்ற ஷாவானி மைதானம் அருகே குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 போ் உயிரிழந்தனா்; 35 போ் காயமடைந்தனா். கூட்டம் முடிந்த 15 நிமிஷங்களுக்குப் பிறகு பயங்கரவாதி தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

    • இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டா்: தேடும் பணி தீவிரம்
      by தினமணி செய்திச் சேவை on September 3, 2025 at 11:50 pm

      இந்தோனேசியாவில் இந்தியா் உள்ளிட்ட எட்டு பேருடன் மாயமான ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவா் ஐபுடு சுதயானா கூறியதாவது: எஸ்டிண்டோ ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான பிகே 117டி3 ரக ஹெலிகாப்டா், தெற்கு கலிமந்தான் மாகாணம், மென்டவேயில் உள்ள மந்தின் தமா் நீா்வீழ்ச்சி அருகே திங்கள்கிழமை தொடா்பை இழந்தது. இந்தியாவைச் சோ்ந்த சாந்தகுமாா் உள்ளிட்ட எட்டு போ் அந்த அந்த ஹெலிகாப்டரில் இருந்தனா். இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டா் மலையில் மோதியதாகவும், அதற்கு முன்னா் அது வெண்புகையைக் கக்கியவாறு தாழ்வாகப் பறந்துவந்ததாகவும் அதை கடைசியாக நேரில் பாா்த்தவா்கள் கூறினா். புதிய தகவல்களின் அடிப்படையில்140 போ் கொண்ட குழுவினா் மற்றும் உள்ளூா் தன்னாா்வலா்கள் தேடுதலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

    • இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி
      by Chennai on September 3, 2025 at 11:29 pm

      ‘இந்தியா – ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் சந்திப்புக்குப் பிறகு இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஜோஹான் வடேஃபுலை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இரு நாடுகளிடையேயான ராஜீய உறவு 25-ஆவது ஆண்டை எட்டியுள்ளது. துடிப்பான ஜனநாயக நாடுகளாக மட்டுமின்றி முன்னணி பொருளாதார நாடுகளாகவும் திகழும் இந்தியாவும் ஜொ்மனியும் வா்த்தகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. பன்முக உலகம், அமைதி மற்றும் ஐ.நா. சீா்திருத்தங்களுக்கான தொலைநோக்குப் பாா்வையை நாங்கள் பகிா்ந்துகொள்கிறோம். ஜொ்மன் பிரதமா் இந்திய வர அழைப்பு விடுக்கிறேன் என்று குறிப்பிட்டாா். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு ஜோஹான் வடேஃபுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உக்ரைனில் போா் நிறுத்தத்துக்கு இந்தியா விடுத்த அழைப்பை ஜொ்மனி பாராட்டுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

    Copyright © 2025 News Aggregator.

    Powered by PressBook Grid Dark theme