இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி எல்லை பெரும் சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக பெற்றோரை பிரிந்த பிள்ளைகள், பிள்ளைகளை தவிக்க விடும் பெற்றோர் என இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் சாரை சாரையாக உறவுகளை இந்திய மண்ணிலேயே விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
